என்.ஐ.ஏ. அமைப்பிற்கென கொண்டு வரப்பட்ட தனிச்சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் : எஸ்.டி.பி.ஐ.யின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வலியுறுத்தல்

கோவை : தேசிய புலனாய்வு முகமை அமைப்பிற்கென தனி சட்டம் கொண்டு வந்துள்ள மத்திய அரசின் முடிவை திரும்பப் பெற வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வலியுறுத்தியுள்ளார்.

கோவை : தேசிய புலனாய்வு முகமை அமைப்பிற்கென தனி சட்டம் கொண்டு வந்துள்ள மத்திய அரசின் முடிவை திரும்பப் பெற வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வலியுறுத்தியுள்ளார். 

கோவை உக்கடம் பேருந்து நிலையம் அருகே உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் கோவை மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டம் அக்கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் இன்று நடைபெற்றது. சூயஸ் விவகாரம் மற்றும் சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நெல்லை முபாரக் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- சோதனை என்ற பெயரில் தொடர்ந்து இஸ்லாமியர்கள் மீதும் சிறுபான்மை இன மக்கள் மீதும் அவதூறாக கைது செய்யும் நடவடிக்கைகள், விசாரணை என்ற பெயரில் தொடர்ந்து சித்தரவதைப்படுத்தி வருகின்றனர். தேசிய புலனாய்வு முகமை அமைப்புக்கு தொடர்ந்து பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் அங்கீகாரம் வழங்கி வருகிறது. தற்போது நாடாளுமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமைக்கு முழு சுதந்திரம் அளிப்பது என்பது போன்ற பல்வேறு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு தொடர்ந்து அந்த அமைப்பிற்கு அதிகாரத்தை அளிக்கும்பட்சத்தில், அவர்கள் சிறுபான்மை இன மக்கள் மீது பல்வேறு அவதூறுகளை புகுத்தி சிறுபான்மையின மக்களை சித்திரவதைக்கு உள்ளாக்குவதுடன், சிறுபான்மை மக்கள் மீது தொடர்ந்து சோதனை என்ற பெயரிலும் கைது நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவது பெருகும். தேசிய புலனாய்வு முகமை அமைப்பிற்கு முழு சுதந்திரம் அளிக்கும் முடிவை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும்.

கோவையில் உள்ள மக்களுக்கு குடிநீர் வழங்கும் உரிமையை சூயஸ் என்னும் வெளிநாட்டு நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தால் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் பொது குழாய்கள் முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது. தமிழக அரசு உடனடியாக இந்த ஒப்பந்த முடிவை அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும். மக்களுக்கு குடிநீர் வழங்கும் உரிமையை தொடர்ந்து மாநகராட்சியை மேற்கொள்ள வேண்டும். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும் வரை சிறுபான்மையின மக்கள் மிகுந்த பாதுகாப்போடு இருந்தனர். ஆனால், அவரது மறைவிற்குப் பின்னர் தொடர்ந்து சிறுபான்மையின பிரிவு மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதற்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

மேலும், தற்போது மத்திய அரசு கொண்டு வரவுள்ள புதிய கல்விக் கொள்கையைப் படித்துப் புரிந்து கொள்வதற்கு ஆறு மாத கால அவகாசம் கேட்டு இருந்தது.  ஆனால், ஒரு மாதம் மட்டுமே அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த ஏன் இவ்வாறு அவசரம் காட்ட வேண்டும்.  இந்த கல்விக் கொள்கைக்கு பலதரப்பட்ட மக்களிடமும் இருந்து எதிர்ப்புகள் கிளம்பி வரும் வேளையில், இவர்கள் இந்த புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் முனைப்புடன் செயல்படுவது கண்டனத்துக்குரியது. இது குறித்து விரைவில் ஆலோசனை செய்து போராட்டங்களைக் கையில் எடுப்போம். 

மாட்டுக்கறி பிரச்சனை பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. மாட்டுக்கறி உணவு உண்ணும் பலர் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகின்றனர். வட மாநிலங்கள் மட்டுமின்றி தமிழகத்திலும் அதுவும் பெரியார் மண்ணிலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றது. மாட்டுக்கறி விவகாரத்தில்  சிறுபான்மையின மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டம் நடத்தி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும், என வேண்டுகோள் விடுத்தார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...