திருப்பூர் : திருப்பூர் அருகே தனியார் நூற்பாலையில் மேலாளர் மர்ம நபரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்து செம்பியநல்லூரில் உள்ள விநாயகர் வில்லேஜ் பகுதியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் தங்கி, அவிநாசியை அடுத்து தெக்கலூரில் உள்ள தனியார் நூற்பாலையில் மேலாளராக பணியாற்றி வருபவர் கணபதி (30). இவரது மனைவி ஜெயமணி (27). இவர்களுக்கு சுபவர்ஷினி (3) என்ற மகள் உள்ளார்.

இதனிடையே, நேற்று இரவு வேலை முடிந்து கணபதி தனது பைக்கில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, செம்பியநல்லூரில் தனது வீட்டிற்கு அருகில் வந்த போது, கணபதியை மர்ம நபர் கத்தியால் சரமாரி குத்தி தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளார். இதனால், இரத்த வெள்ளத்தில் அலறித் துடித்த கணபதியின் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நெஞ்சு, வயிறு மற்றும் முதுகு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10க்கும் மேற்பட்ட இடங்களில் ஆழமான கத்திக்குத்து காயங்களால், அதிக அளவு இரத்தம் இழந்த கணபதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவிநாசி போலீசார் தாக்குதலுக்கு பயன்படுத்திய கத்தியை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த கொடூர கொலைக்கான காரணம் குறித்தும், கொலையாளி குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.