கோவை : ராம்நகர் அருகே உள்ள பாழடைந்த வீட்டில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முந்தைய ராணுவத்திற்கு பயன்படுத்தும் பீரங்கி குண்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை ராம்நகர் பகுதியில் சந்தன மரத்தை வெட்ட முயன்ற மர்ம கும்பல் காவலாளியின் சத்தம் கேட்டு தப்பி ஓடினர். இந்த சம்பவத்தில் தகவலறிந்து வந்த காட்டூர் போலீசார் அந்த பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். அதேபோல, சுற்றுவட்டாரப் பகுதிகளில் தடயங்களை சேகரித்த போலீசார் அருகே இருந்த பாழடைந்த கட்டிடத்திற்கு சென்று சோதனைகள் மேற்கொண்டனர். அப்படி சோதனைகள் மேற்கொண்ட போது அந்த வீட்டினுள் பீரங்கி குண்டு ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர். பின்னர், வந்த வெடிகுண்டு நிபுணர்கள் பீரங்கிக் குண்டை எடுத்துச் சென்றுவிட்டனர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பி3 காட்டூர் போலீசார் நடத்திய விசாரணையில், இந்த வீட்டின் உரிமையாளர் ராம்ஜி என்பது தெரியவந்துள்ளது. மேலும், இந்த பீரங்கிக் குண்டானது இந்திய இராணுவத்தில் பயன்படுத்தும் பீரங்கி குண்டு என்பதும், இது 30 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதும் தெரிய வந்ததுள்ளது. தொடர்ந்து, இந்த பீரங்கி குண்டு இந்த வீட்டிற்கு எப்படி வந்தது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.