உதகை படகு இல்ல ஏரியில் இரு இளைஞர்களின் உடல் மீட்பு : போலீசார் விசாரணை

நீலகிரி : உதகை படகு இல்ல ஏரியில் இரண்டு இளைஞர்களின் உடல் மீட்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி : உதகை படகு இல்ல ஏரியில் இரண்டு இளைஞர்களின் உடல் மீட்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



உதகை காந்தல் பகுதியைச் சேர்ந்த கெளதம் (24) மற்றும் டென்னிஷ் (24) ஆகியோர் கடந்த ஞாயிறன்று காணாமல் போயிருந்தனர். இவர்களை தங்களது உறவினர்களின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் காணவில்லை என்பதால், இது தொடர்பாக காந்தல் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில், இன்று காலை உதகை தேனிலவு படகு ஏரியில் இருவரும் சடலமாக மிதப்பதாக அங்கிருந்தவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 



இருவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்ததும் இவர்கள் தற்கொலை செய்து கொண்டனரா..? அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா..? என்பது தெரிய வரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...