புதிய மாவட்டங்களாக உதயமாகிறது தென்காசி, செங்கல்பட்டு : முதலமைச்சர் அறிவிப்பு

கோவை : நிர்வாக வசதிக்காக நெல்லை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு தென்காசி மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கோவை : நிர்வாக வசதிக்காக நெல்லை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு தென்காசி மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது 32 வருவாய் மாவட்டங்கள் இருக்கின்றன. கடைசியாக கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக்கப்படும் என்று கடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கான ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமிக்கப்பட்டு புதிய மாவட்ட செயல்பாட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில், இன்று சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், தென்காசி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் புதியதாக உருவாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. நெல்லை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டு தென்காசி மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளன. இதற்காக இரண்டு தனி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. தென்காசி மாவட்டத்தின் கீழ் தென்காசி, சிவகிரி, அம்பாசமுத்திரம், செங்கோட்டை, கடையநல்லூர் ஆகிய வட்டங்கள் உள்ளடங்கும் என கூறப்படுகிறது, எனக் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்துவரும் நிலையில், இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...