கீழ் கோத்தகிரி அருகே கால்நடை மேய்ச்சலுக்கு சென்ற முதியவர் காட்டு யானை தாக்கி பலி

கோவை : கோவை மாநகராட்சியில் அதிகளவிலான குப்பைகளை உருவாக்கும் நிறுவனங்களோ அல்லது குடியிருப்புகளோ, அவர்களே அதனை கையாள வேண்டும் எனவும், ஆகஸ்ட் மாதம் முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி : கீழ் கோத்தகிரியில் வனப்பகுதிக்கு அருகே கால்நடை மேய்ச்சலுக்காக சென்ற முதியவர் காட்டு யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். 

நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி கண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் பாலன் (66). இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை வனத்திற்கு அருகில் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் இருந்த காட்டு யானை ஒன்று அவரை தூக்கி வீசியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். நேற்று இரவு முழுவதும் பாலன் வீட்டிற்கு திரும்பி வராததால், உறவினர்கள் இன்று பாலனை காட்டுப் பகுதியில் தேடினர். அப்போது, அவர் பலத்த காயங்களுடன் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இது தொடர்பாக வனத்துறை மற்றும் காவல்துறையிடம் தகவல் தெரிவித்தனர்.



அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், பாலனின் உடலைக் கைப்பற்றி கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். தற்போது அதிக அளவில் யானைகள் நடமாடி வருவதாகவும், யானைகளை அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...