கோவை : இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் நடைபெற்ற தபால்துறை ரத்து செய்யப்பட்ட நிலையில், கோவையில் வழக்கறிஞர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தபால்துறையில் அஞ்சலர் உட்பட 4 வகையான பணியிடங்களுக்கான தேர்வுகள் நாடு முழுவதும் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்றது. கடந்த ஆண்டு இத்தேர்வு தமிழ் உட்பட 15 பிராந்திய மொழிகளிலும் நடத்தப்பட்ட நிலையில், இந்த முறை தபால் தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டது. இதனால், தமிழகத்திலிருந்து 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அதிர்ச்சியுடன் தேர்வை எழுதினர். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழக சட்டமன்றத்திலும் இது தொடர்பாக விவாதங்கள் நடந்தன.
இதையடுத்து, மாநிலங்களவையில் இந்த பிரச்சினையை எழுப்பிய அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. எம்.பி.க்கள் அவையை முடக்கினர். அப்போது, தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், கடந்த ஞாயிறு அன்று நடந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் புதிய தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்தார்.
இந்த நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பை வரவேற்கும் விதமாக இன்று மதியம் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் முன்பு வழக்கறிஞர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.