கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 105 பேர் மனு : 3 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை

கோவை : கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத்திடம் 105 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

கோவை : கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத்திடம் 105 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர். 

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத்தின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளரிடம், மாநகராட்சியின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் 105 கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர். இக்கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாநகராட்சி ஆணையாளர் இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 



 

இதில், மத்திய மண்டலத்தைச் சேர்ந்த ஒரு பயனாளிக்கு வணிக முறையிலிருந்து குடியிருப்பு முறைக்கு குடிநீர் கட்டண மாறுதல் உத்தரவையும், ஒரு மனுதாரரின் கோரிக்கையின்படி, சொத்துவரி பெயர் திருத்தம் உத்தரவையும், மற்றொரு மனுதாரரின் கோரிக்கையின்படி குப்பைகள் அகற்ற உடனடி நடவடிக்கையும்; ஆக மொத்தம் 3 பேரின் கோரிக்கையின் மீது மாநகராட்சி ஆணையாளரால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 



மேலும், ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் எனவும், பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் எனவும், குடிநீர் வசதி, சுகாதார வசதி, மின்விளக்கு வசதி மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகள் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்தார். 



இக்கூட்டத்தில், மண்டல உதவி ஆணையர்கள் தி.ரா.ரவி, சரவணன், அண்ணாத்துரை, செந்தில்குமார் ரத்தினம், ம.செல்வன், மகேஷ்கனகராஜ், உதவி ஆணையர் (பணியமைப்பு) மோகனசுந்தரி, செயற்பொறியாளர் ஞானவேல், நகரமைப்பு அலுவலர் (திட்டம்) ரவிச்சந்திரன், நகர்நல அலுவலர் மரு.கே.சந்தோஷ்குமார், கணக்கு அலுவலர்கள் லட்சுமிபிரபா (குடிநீர் பிரிவு), மாணிக்கம் (வருங்கால வைப்புநிதி), மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...