நீலகிரி : குன்னூர் கைகாட்டி வனச்சரகத்திற்குட்பட்ட தேயிலைத் தோட்டத்தில் மர்மமான முறையில் ஆண் கரடி உயிரிழந்து கிடந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் கைகாட்டி வனசரகத்திற்கு உட்பட்ட சன்னிசைடு தேயிலை தோட்டத்திற்கு உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்த சுமார் 8 வயது மதிக்கத்தக்க ஆண் கரடி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது. இது குறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர், தேயிலை தோட்டத்திற்கு அடிக்கப்பட்ட மருந்துகளை சாப்பிட்டு கரடி உயிரிழந்துள்ளதா..? அல்லது வயதின் மூப்பால் இறந்துள்ளதா..? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரடி உயிரிழப்பிற்கான காரணம் பிரேத பரிசோதனை முடிந்த பிறகே தெரிய வரும் என கைகாட்டி வனச்சரகர் சரவணன் தெரிவித்தார்.