நீலகிரியில் பிளேடை விழுங்கிய மானை வேட்டையாடிய புலி உயிரிழப்பு

நீலகிரி : உதகை அருகே உள்ள பார்சன்ஸ் வேலி அணைப்பகுதியில் சடலமாகக் கிடந்த புலியின் உடலை பிரேதப் பரிசோதனை செய்ததில், பிளேடை விழுங்கிய மானை வேட்டையாடியதால், உடல்நலக்குறைவு ஏற்பட்டு புலி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.

நீலகிரி : உதகை அருகே உள்ள பார்சன்ஸ் வேலி அணைப்பகுதியில் சடலமாகக் கிடந்த புலியின் உடலை பிரேதப் பரிசோதனை செய்ததில், பிளேடை விழுங்கிய மானை வேட்டையாடியதால், உடல்நலக்குறைவு ஏற்பட்டு புலி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. 

நீலகிரி மாவட்டம் உதகையில் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய பார்சன்ஸ் வேலி அணைப்பகுதியில் 15 வயது மதிக்கத்தக்க ஆண் புலி ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வன அதிகாரிகள் புலியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த பிரேதப் பரிசோதனையில் புலியின் வயிற்றில் மான் இறைச்சியுடன் பிளேடு துண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



இது குறித்து வன ஆர்வலர் மோகன்ராஜ் கூறும்போது :- இப்பகுதியில் உள்ள தீட்டுக்கல் குப்பை கிடங்கில் உதகை நகராட்சிப் பகுதியில் இருந்து கொண்டு வரப்படும் குப்பைகள் கொட்டப்படுவது வழக்கம். இதில் இருந்த உணவுப் பொருட்களை மேய்ந்து கொண்டிருந்த மான் பிளேடு துண்டுடன் சேர்ந்து உணவினை உட்கொண்டுள்ளது. அப்போது புலி, மானை வேட்டையாடி உண்டதில் பிளேடு துண்டு மானின் இறைச்சியுடன் சேர்ந்து புலியின் வயிற்றுக்குள் சென்றதால் புலி உயிரிழந்துள்ளது, என தெரிவித்துள்ளார்.

மேலும், உணவு கழிவுகளைக் கொட்டுபவர்கள் பிளேடு போன்ற பொருட்களைக் குப்பைகளில் கொட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...