பில்லூர் நீர்த்தேக்கம் அருகே காட்டெருமை தாக்கியதில் முதியவர் படுகாயம்

கோவை : பில்லூர் நீர்த்தேக்கம் அருகே காட்டெருமை தாக்கியதில் விவசாயப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முதியவர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை : பில்லூர் நீர்த்தேக்கம் அருகே காட்டெருமை தாக்கியதில் விவசாயப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முதியவர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கண்டி அத்திக்கடவு பகுதியைச் சேர்ந்த ஆர். மருதன் (60) என்ற முதியவர் பில்லூர் நீர்த்தேக்கம் அருகே உள்ள தனது நிலத்தில் விவசாயப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த காட்டெமை எதிர்பாராதவிதமாக அவரை தாக்கியுள்ளது. இதில், பலத்த காயமடைந்த மருதன் சம்பவ இடத்திலேயே நகர முடியாமல் படுத்துக் கிடந்தார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், அவரை தேடி உறவினர்கள் விவசாய நிலம் உள்ள இடத்திற்கு வந்துள்ளனர். அங்கு பலத்த காயங்களுடன் கிடந்த மருதனை கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள், அவரை உடனடியாக சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...