தேசிய கிராமப்புற மேலாண்மை மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைப்பு சார்பில் அமிர்தாவின் ஏ-வீவ் மொபைல் செயலி அறிமுகம்

கோவை : தேசிய கிராமப்புற மேலாண்மை மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைப்பு சார்பில் அமிர்தா பல்கலைக்கழகம் உருவாக்கிய ஏ வீவ் மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கோவை : தேசிய கிராமப்புற மேலாண்மை மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைப்பு சார்பில் அமிர்தா பல்கலைக்கழகம் உருவாக்கிய ஏ வீவ் மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த மொபைல் செயலியை பயன்படுத்தி, தொலைதூரத்தில் உள்ள கிராமங்களின் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பணியை கிராமப்புற மேலாண்மை நிறுவனம் செய்து வருகிறது. குறிப்பாக, நவீன முறையில் விவசாயம் செய்வது எப்படி என்பது குறித்து கிராமப்புற மக்களுக்கு இந்தச் செயலி மூலமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்தகைய முயற்சியால் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் அவர்தம் பொருளாதாரம் மேம்படும்.

அமிர்தா பல்கலைக்கழகம் உருவாக்கிய இந்தச் செயலி மூலமாக வீடியோ கான்பிரன்ஸிங் முறையில் மத்திய அரசு அதிகாரிகள், விவசாயிகளுடன் நேரடியாக உரையாட முடியும். இந்தச் செயலி அனைத்து வட்டார மொழிகளிலும் உருவாக்கப்பட்டதால், கிராமப்புற மக்களால் இதை எளிதில் பயன்படுத்த முடியும். தற்போது இந்தச் செயலி நாடு முழுவதும் உள்ள 12 ஆயிரம் கல்லூரிகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், 216 பொறியியல் கல்லூரிகளிலும் இந்தச் செயலி பயன்பாட்டில் இருக்கிறது. குறிப்பாக, விஸ்வேஸ்வரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் இந்தச் செயலியின் பயன்பாடு அதிகமாக உள்ளது. இதைத் தவிர, ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.டி. ஆகிய உயர்கல்வி நிறுவனங்களிலும் பரவலாக இந்தச் செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக கிராமப்புற மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநர் ஆர். ரெட்டி கூறியதாவது :- கிராமப்புற மேலாண்மைத் திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தச் செயலி முக்கிய பங்காற்றுகிறது. குறிப்பாக, மத்திய அரசின் கிராமப்புற நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க இது பேருதவி செய்கிறது. இந்தச் செயலி இந்தியாவில் மட்டுமல்ல, பல நாடுகளில் கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உதவியாக இருக்கிறது, என்றார். 

இந்தச் செயலியை வடிவமைத்த பேராசிரியர் கமல் பிஜிலானி கூறுகையில், "ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான கிராமப்புற மக்களுடன் பயிற்சியாளர் நேரடியாக பேச முடியும். தற்போது, கிராமப்புறத்தில் உள்ள இணையதள வசதியைப் பயன்படுத்தி, சமூக மாற்றத்துக்கு இந்தச் செயலி வித்திடுகிறது. இந்தச் செயலி பிஜி, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது," எனக் கூறினார்.

கடந்த மே 15-ம் தேதி அமிர்தா பல்கலைக்கழகமும், கிராமப்புற மேலாண்மை நிறுவனமும் ஏ வீவ் செயலி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன் மூலமாக, கிராமப்புற மேலாண்மையில் இந்தச் செயலி முக்கிய பங்காற்ற உள்ளது. கிராமப்புற வளர்ச்சியை உறுதி செய்வதில் தேசிய கிராமப்புற மேலாண்மை நிறுவனம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகிறது. சர்வதேச அளவில் சிறப்பான ஆராய்ச்சி செய்வது வருவதால் அமிர்தா பல்கலைக்கழகத்துக்கு நேக் அமைப்பு ஏ சான்றிதழை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...