டெல்லி : கோவை-மங்களூர் இன்டர்சிட்டி உள்ளிட்ட ரயில்களை போத்தனூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி இயக்க வேண்டும் என மத்திய ரயில்வே துறையின் இணை அமைச்சர் சுரேஷ் அங்காடியிடம் பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம் மனு அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :- பொள்ளாச்சி தொகுதி மக்களின் வசதிக்காக கோவை - மங்களூர் இன்டர்சிட்டி, பெங்களூர் - எர்ணாகுளம் இன்டர்சிட்டி, ஆலப்புழா - டாட்டா நகர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களை போத்தனூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி இயக்க வேண்டும், என வலியுறுத்தப்பட்டிருந்தது. மேலும், இந்த சந்திப்பின் போது, மதுக்கரை - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குறுகிய பாதை அகலப்படுத்தும் பணி உடனடியாக ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ரயில்வே மேம்பாலம் அகலப்படுத்தும் பணியில் மாநில அரசு 50 சதவீதமும், ரயில்வே நிர்வாகம் 50 சதவீத பங்களிப்பும் செய்யப்பட வேண்டும் என்றும், எனவே, பாலம் அகலப்படுத்தும் பணிக்கு கழகத் தலைவர் ஸ்டாலினை அணுகி, தமிழக அரசை இப்பணிக்கு உண்டான நிதியை வழங்கிடக் கோரிக்கை வைக்கப்படும் என பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம் தெரிவித்தார்.