கோவை : மேட்டுப்பாளையத்தில் நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள நீர் மேலாண்மை மற்றும் மழைநீர் சேகரிப்பு குறித்து மத்திய அரசின் டெல்லி குழு நேற்று பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டது.

இந்த ஆய்வில், ஜெயசீலன் ஜ.ஏ.எஸ். மற்றும் நீர் மேலாண்மை விஞ்ஞானி ஞானசுந்தர் ஆகியோர் தலைமையிலான ஜல்சக்தி அபியான் என்ற இந்த மத்தியக்குழு, நகராட்சி பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள கல்வி நிலையங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படுத்தப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு குறித்து நேரில் பார்வையிட்டதுடன் நகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

பின்னர், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த டெல்லி குழு முதன்மை அதிகாரியான ஜெயசீலன் கூறியதாவது :- இந்தியாவில் 216 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. அதனை உயர்த்த மத்திய அரசு ஜல்சக்தி அபியான் திட்டத்தை உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தற்போது கோவை மாவட்டத்தை ஆய்வு செய்து வருகிறோம். இந்த மாவட்டத்தில் உள்ள குளங்கள், குட்டைகள், ஏரிகள், ஆழ்குழாய் கிணறுகள் குறித்தும் கணக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம். மேலும், மழைநீர் சேகரிக்கவும் அவற்றை பயன்படுத்துவது குறித்து தமிழக அரசுடன் இணைந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
மேலும் கல்லூரிகள், பள்ளிகள், குடியிருப்புகள் ஆகிய பகுதியில் பயன்படுத்தப்படும் குளியல் நீர், கை கழுவும் நீர், துவைக்கும் தண்ணீர் ஆகியவற்றை சுத்திகரிப்பு செய்து அதனை பயன்படுத்த 30 லட்சம் மதிப்பில் மறுசுழற்சி முறையை ஏற்படுத்த உள்ளோம். இதன்மூலம், நிலத்தடி நீர்மட்டத்தை உயரத்த திட்டமிட்டுள்ளோம். இந்த திட்ட நடைமுறை குறித்து ஆறு மாதத்திற்குப் பின் மத்திய அரசுக்கு அறிக்கை தர உள்ளோம், என்றார். இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.