பொள்ளாச்சியில் குடிமராமத்து பணிகள் முன்னேற்றம் குறித்து ஆலோசனைக் கூட்டம்

கோவை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் குடிமராமத்து பணிகள் முன்னேற்றம் குறித்து பொதுப்பணித்துறை அரசு கூடுதல் செயலர் மற்றும் குடிமராமத்துப் பணி சிறப்பு அலுவலர் பாலாஜி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் குடிமராமத்து பணிகள் முன்னேற்றம் குறித்து பொதுப்பணித்துறை அரசு கூடுதல் செயலர் மற்றும் குடிமராமத்துப் பணி சிறப்பு அலுவலர் பாலாஜி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

​இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி, வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமார், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் செல்வகுமார், கண்காணிப்பு பொறியாளர் முத்துசாமி, செயற்பொறியாளர் ஆனந்தன், உதவி செயற்பொறியாளர் ஜெயப்பிரகாஷ், உதவி இயக்குனர் (நில அளவைகள்) தவமணி, விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

​பின்னர், பொதுப்பணித்துறை அரசு கூடுதல் செயலர் மற்றும் குடிமராமத்துப் பணி சிறப்பு அலுவலர் பாலாஜி கூறியதாவது :- தமிழகத்தில் நீர்ஆதாரங்களை செம்மைப்படுத்தி விவசாயிகள் பயன்பெறும் வகையில், 2019-20 ஆம் ஆண்டிற்கு தமிழ்நாடு முழுவதும் 1,829 பணிகள் ரூ. 499.68 கோடி மதிப்பீட்டில் குடிமரமாத்து திட்டத்தின் கீழ் மேற்கொள்ள தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் கோவை மாவட்டத்தில் 45 பணிகள் ரூ. 7.43 கோடியில் செயல்படுத்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை-நீர்வள ஆதாரத்துறை மூலம் பதிவு பெற்ற பாசன சங்கங்கள் (அல்லது) நீரினை பயன்படுத்துவோர் சங்கங்கள் (அல்லது) பாசனதாரர்கள் தொகுப்பு வாயிலாக பணிகளை செயல்படுத்திட அரசு உரிய வழிமுறைகள் வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் கால்வாயில் வாயில் வளர்ந்துள்ள செடிகொடிகள் முட்புதர்களை அகற்றுதல், கால்வாயினை தூர்வாரி சுத்தம் செய்தல், கால்வாயில் சேதமடைந்துள்ள குறுக்கு கட்டங்களை பழுது பார்த்தல், பழுதடைந்த மடைகளை சீரமைத்தல், பழுதடைந்த ஷட்டர்களை புதுப்பித்தல், கால்வாய் கரைகளை பலப்படுத்துதல், குளங்களின் கரைகளை பலப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. ​“பங்கேற்பு பாசன மேலாண்மையில்” விவசாயிகள் தங்களை செவ்வனே ஈடுபடுத்தி பங்களிப்பாக மதிப்பீட்டுத் தொகையில் 10 சதவீதம் பணமாகவோ, மனித உழைப்பாகவோ அல்லது பொருளாகவோ வழங்கிடவும், 90 சதவீதம் அரசின் நிதியாகவும் கொண்டு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

​கோவை மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதியன்று சூலூர் வட்டம், இருகூர் மற்றும் நீலாம்பூர் வழங்கு வாய்க்காலில் பொதுப்பணித்துறை நீர் வள ஆதார அமைப்பு மூலம் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் குடிமராமத்து பணிகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி துவக்கி வைத்தார்.

அதனடிப்படையில், இன்று கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்து பணிகள் குறித்து அரசு உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டம் முழுவதும் விவசாயிகளுக்கான திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. எனவே, இதில் எவ்வித முறைகேடும் இல்லாமாலும், இப்பணிகளை விரைவாகவும், உரிய காலத்திற்குகள் முடிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

​அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ள இத்திட்டமானது அந்தந்த பகுதி விவசாயிகள் மூலமாக செயல்படுத்தப்படுகின்றன. அரசு அலுவலர்கள் குடிமராமத்து பணிகள் மேற்கொள்வதுடன் வாய்க்கால்களில் நீர் செல்வதற்கான வழிகளை கண்காணித்திட வேண்டும். வாய்க்கால்களில் நீர் செல்லும்போது வேறு எங்கும் அதிகளவில் நீர் விரையம் ஆகாமல் சரிசெய்யவேண்டும்.​

குடிமராமத்து திட்டத்தின் மூலம் வாய்க்காலில் வரும் நீரை பயன்படுத்தி விவசாயிகள் தங்களது வருமானத்தை பெருக்கிக் கொள்வதுடன், தங்கள் பகுதிகளின் நிலத்தடி நீரைத் தேங்கச் செய்யும் வகையில் மழைநீர் சேமிப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். பருவ மழை காலங்களில் வீணாகும் மழைநீரை சேமிப்பதன் மூலம் விவசாயிகள் பயன்பெறலாம், என பொதுப்பணித்துறை அரசு கூடுதல் செயலர் மற்றும் குடிமராமத்துப் பணி சிறப்பு அலுவலர் பாலாஜி தெரிவித்தார்.



​அதனைதொடர்ந்து, குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படும் தேவம்பாடி குளம், சேத்துமடை, தொறையூர், சோழபாளையம், நல்லம்பள்ளி ஆகிய பகுதிகளை பொதுப்பணித்துறை அரசு கூடுதல் செயலர் மற்றும் குடிமராமத்துப் பணி சிறப்பு அலுவலர் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் கு. இராசாமணி, விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...