கோவையில் போக்குவரத்து போலீசாரின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் உருண்டு ஆர்ப்பாட்டம் செய்த இருவர் கைது

கோவை : சாய்பாபா கோவில் அருகே போக்குவரத்து போலீசாரின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சாலையில் படுத்து உருண்டு ஆர்ப்பாட்டம் செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.


கோவை : சாய்பாபா கோவில் அருகே போக்குவரத்து போலீசாரின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சாலையில் படுத்து உருண்டு ஆர்ப்பாட்டம் செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை சாய்பாபாகோவில் பகுதியில் கடந்த 11-ம் தேதி போக்குவரத்து பிரிவு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயம், தலைக்கவசம் அணியாமல் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பகுதியை சேர்ந்த அண்ணாமலை என்பவரது மகன் பழனி மற்றும் அவரது சகோதரர் புரோட்டா மாஸ்டர் மூர்த்தி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். இருவரும் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, காவலர்கள் அவர்களது வாகனத்தை தடுத்து நிறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பழனி, மூர்த்தி ஆகியோர் சாலையின் நடுவே படுத்து போராட்டம் நடத்தினர். மேலும், போலீசார் டிராபிக்கினை மதிப்பதாக இருந்தால், எல்லோரையும் சோதனை பண்ண வேண்டுமெனக் கூறி சாலையின் நடுவே படுத்து உருண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.



இந்த நிலையில், திருவெண்ணைநல்லூர் பகுதியில் வைத்து பழனி மற்றும் மூர்த்தியை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்கள் இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 341, 353 ,506 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...