5-வது கோவை புத்தகத் திருவிழா கொடிசியாவில் வரும் 19-ம் தேதி தொடக்கம்

கோவை : கோவை மாவட்டத்தில் தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும் 5-வது கோவை புத்தகத் திருவிழா வரும் 19-ம் தேதி கொடிசியாவில் தொடங்குகிறது.

கோவை : கோவை மாவட்டத்தில் தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும் 5-வது கோவை புத்தகத் திருவிழா வரும் 19-ம் தேதி கொடிசியாவில் தொடங்குகிறது. 



கோவை கொடிசியா மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம் இணைந்து 5-வது கோவை புத்தகத் திருவிழாவை நடத்துகின்றன. கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் வரும் 19-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை தொடர்ந்து பத்து நாட்கள் நடக்கிறது. 19-ம் தேதி மாலை 6 மணிக்கு நடக்கும் தொடக்கவிழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி கலந்து கொண்ட இந்த புத்தகத் திருவிழாவை தொடங்கி வைக்கிறார். 



இது தொடர்பாக நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கொடிசியா தலைவர் ஆர். ராமமூர்த்தி பேசியதாவது :- கொடிசியா சார்பில் நடத்தப்படும் இந்தப் புத்தகத் திருவிழா, குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே புத்தக வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த பெரிதும் உதவும். இந்தப் புத்தகத் திருவிழாவில் கோவை ரோட்டரி கிளப்புடன் இணைந்து முதல்முறையாக குழந்தைகளுக்கான கட்டுரை எழுதுதல் போட்டி நடத்தப்பட இருக்கிறது. ஏற்கனவே, இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில் சுமார் 3,000 கட்டுரைகள் வந்து சேர்ந்துள்ளன. அதில், சிறந்த 1,000 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு, சுமார் ரூ. 3 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வரையிலான பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது. மேலும், சிறந்த கட்டுரைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்படும், எனக் கூறினார். 



"கோவை மக்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. முதல்முறையாக இந்த ஆண்டு முதல் கோவை புத்தக திருவிழாவில் பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது. கற்பனைக்கதைகள், உண்மை கதைகள் மற்றும் கவிதைகள் என 3 பிரிவுகளின் கீழ் சிறந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. குணா கந்தாசாமி, சோலை மாயவன் மற்றும் குருசாமி ஆகியோர் பரிசுகளை வழங்க இருக்கின்றனர். மேலும், கொடிசியா சார்பில் வரும் 21-ம் தேதி எழுத்தாளர் வண்ணநிலவனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்கம் வழங்கப்பட இருக்கிறது," என்கிறார் கோவை புத்தக திருவிழாவின் தலைவர் விஜயானந்த்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...