கோவை மாநகராட்சி அனைத்து வார்டுகளிலும் மழைநீர் கட்டமைப்புகளை அமைக்க மாநகராட்சி ஆணையர் வலியுறுத்தல்

கோவை : கோவை மாநகராட்சி அனைத்து வார்டுகளிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அனைவரும் தவறாமல் அமைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் வலியுறுத்தியுள்ளார்.

கோவை : கோவை மாநகராட்சி அனைத்து வார்டுகளிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அனைவரும் தவறாமல் அமைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் வலியுறுத்தியுள்ளார். 

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத், தலைமையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அனைத்து வீடுகள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களின் கட்டிடங்களில் துரிதமாக ஏற்படுத்துதல் குறித்து மாநகராட்சி அலுவலர்கள், பொறியாளர்கள், தன்னார்வ அமைப்பினருடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.ச.பிரசன்னா ராமசாமி அவர்கள் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் கூறியதாவது :- கோவை மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலுள்ள அனைத்து வீடுகள், அரசு அலுவலகங்கள், உணவு விடுதிகள், தனியார் நிறுவனங்களின் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை தவறாமல் அனைவரும் அமைத்திடல் வேண்டும். மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அனைத்து வீடுகளிலும் உள்ளதா என்பதை மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் செயல்பாட்டு நிலையில் உள்ளதா..? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். இக்கட்டமைப்புகள் இல்லாத கட்டிடங்களுக்கு மாநகராட்சி அலுவலர்கள் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். புதிதாக வரிவிதிப்புக்கு முன்பு மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் இருந்தால் மட்டுமே சம்மந்தப்பட்டவர்களுக்கு வரிவிதிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், ஒவ்வொரு மண்டலத்திற்கும் இரண்டு வாகனங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பலகைகள் வைத்திட அனைத்து மண்டல உதவி ஆணையர்களும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒரு வார்டுக்கு 3 பேர் கொண்ட குழுவும், 5-வார்டுகளுக்கு சேர்த்து ஒரு கண்காணிப்பு அலுவலரும் நியமிக்கப்பட்டு, மழைநீர் சேகரிப்பு தொடர்பான பணிகளை ஆய்வு செய்து துரிதமாக பணிகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் மழைநீர் சேகரிப்பின் அவசியம் கருதி மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை வீடுகளில் தவறாமல் அமைக்க வேண்டும், என தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில், மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், உதவி ஆணையர் ஏ.ஜே.செந்தில் அரசன், செயற்பொறியாளர்கள் ஞானவேல், சரவணக்குமார், மற்றும் பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள், தன்னார்வ அமைப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...