ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் கடந்த ஞாயிறன்று நடந்த அஞ்சல்துறை தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், தமிழ் உள்பட பிராந்திய மொழிகளில் தேர்வு மீண்டும் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தபால்துறையில் அஞ்சலர் உட்பட 4 வகையான பணியிடங்களுக்கான தேர்வுகள் நாடு முழுவதும் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்றது. கடந்த ஆண்டு இத்தேர்வு தமிழ் உட்பட 15 பிராந்திய மொழிகளிலும் நடத்தப்பட்ட நிலையில், தேர்வுக்கு 3 நாட்களுக்கு முன்பு கடந்த 11-ம் தேதி வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தபால் தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. தமிழகத்திலிருந்து 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், திடீரென தமிழ் மொழி நீக்கப்பட்டதால் தேர்வர்கள் அதிர்ச்சியடைந்தனர். மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழக சட்டமன்றத்திலும் இது தொடர்பாக விவாதங்கள் நடந்தது.
இந்த நிலையில், இன்று மாநிலங்களவையில் இந்த பிரச்சினையை எழுப்பிய அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. எம்.பி.க்கள் அவையை முடக்கினர். பிற்பகலில் இவ்விவகாரம் குறித்து பேசிய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், கடந்த ஞாயிறு அன்று நடந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் புதிய தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்தார்.