கோவை : ஓட்டுநர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட கார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை : ஓட்டுநர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட கார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓட்டுநர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், போக்குவரத்து காவலரால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட ஓட்டுநர்கள் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், மீட்டர் கட்டணத்தை வரைமுறைப்படுத்த வேண்டும், மற்ற துறைகளில் உள்ளது போல் ஓட்டுநர்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை டாடாபாத் பகுதியில் கார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தும் விதமாக, கையில் போஸ்டர்களை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்தனர்.