நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், தோட்டக்கலைத் துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பாக இயற்கை விவசாயத்தை காப்போம் என்ற பேரணியைப் படுக இன மக்களின் பாரம்பரிய விவசாய உடையில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார்.

'நஞ்சில்லா நீலகிரி விவசாயத்தை உருவாக்குவோம்' என்ற எண்ணத்தில் இயற்கை விவசாயத்தை அனைத்து விவசாயிகளும் செய்ய முன் வரவேண்டும் என்ற ஒரு நோக்கத்தோடு இந்த பேரணியானது நடைபெற்றது. விவசாயம் இன்றைய அளவில் அதிக நச்சுத்தன்மை கொண்ட மருந்துகளைக் கொண்டு விவசாயிகள் விவசாயம் செய்து வரும் நிலையில், இதிலிருந்து மாறுபட்டு இயற்கை விவசாயத்தை புரிந்து அதை கடைபிடிக்க வேண்டும் எனவும், நீலகிரி மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, விவசாயிகளுக்கான இயற்கை முறை விவசாயம் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பாக அனைத்து விவசாயிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு, விவசாய நிலங்களில் இயற்கை விவசாயத்தை செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் பல்வேறு திட்டங்களை விவசாயிகளுக்குக் கொடுத்துள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு இன்று இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு பேரணியானது, சுமார் 3 ஆயிரம் விவசாயிகள் கலந்து கொண்ட பேரணி உதகை மத்திய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்தப் பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சென்றடைந்தது. அதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் விவசாயிகளிடம் இயற்கை முறை விவசாயத்தை எவ்வாறு விவசாயிகள் பயன்படுத்தி மண் வளத்தைக் காக்க வேண்டும் என விவசாயிகளிடையே உரையாடினார்.

இந்தப் பேரணியில் நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மண்வளம் காப்போம், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும், நஞ்சில்லா நீலகிரி உருவாக்குவோம் என கோஷங்களை எழுப்பியதோடு, பதாகைகளை ஏந்தியும் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர்.
பின்பு செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பேசுகையில், "இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பது ஒவ்வொரு விவசாயின் கடமை. அதை உணர்ந்து மண்வளத்தை காக்க இந்த விழிப்புணர்வு பேரணியானது நடைபெறுகிறது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் இயற்கை விவசாயம் மிகப்பெரிய அளவில் விவசாயிகளிடையே ஒரு மாற்றத்தை உருவாக்கும் என்பதே இந்த பேரணியின் நோக்கம்," என தெரிவித்தார்.