மனைவியின் பெயரில் கடனைப் பெற்றுக் கொண்டு வேறொரு பெண்ணுடன் தப்பியோடிய கணவர் : பாதிக்கப்பட்ட பெண் தர்ணா

திருப்பூர் : புதிதாக தொழில் தொடங்குவதாகக் கூறி மனைவியின் பெயரில் கடனைப் பெற்றுக் கொண்டு, வேறொரு பெண்ணுடன் தப்பியோடி கணவரை மீட்டுத் தரக் கோரி திருப்பூர் காவல்நிலையம் முன்பு பாதிக்கப்பட்ட பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர் : புதிதாக தொழில் தொடங்குவதாகக் கூறி மனைவியின் பெயரில் கடனைப் பெற்றுக் கொண்டு, வேறொரு பெண்ணுடன் தப்பியோடி கணவரை மீட்டுத் தரக் கோரி திருப்பூர் காவல்நிலையம் முன்பு பாதிக்கப்பட்ட பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



திருப்பூரை அடுத்த ராக்கியாபாளையம் பகுதியைச் சேர்ந்த அன்னபூரணி -- செந்தில்குமார் தம்பதியினர். திருமணமாகி 23 வருடங்களாகிய நிலையில், செந்தில்குமார் புதிதாக தொழில் துவங்குவதாக தனது மனைவியிடம் கூறியுள்ளார். இதனை நம்பிய அன்னபூரணியும், சுய உதவி குழுக்கள், தனியார் நிதி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து கடன் வாங்கி தனது கணவரிடம் கொடுத்துள்ளார். இந்த நிலையில், செந்தில்குமார் அதே பகுதியைச் சேர்ந்த மீனாகுமாரி என்ற பெண்ணுடன் கடந்த வாரம் தலைமறைவாகியுள்ளார். 



இதனிடையே, கடன் கொடுத்தவர்கள், அன்னபூரணியிடம் கடன் கேட்டு தகாத வார்த்தைகளால் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த அன்னபூரணி, திருமுருகன்பூண்டி காவல்நிலையத்தில் தனது கணவரை மீட்டு கொடுக்கும்படி புகார் அளித்துள்ளார். ஆனால், அவரது புகார் மீது போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்காமல், திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி கூறியதாகக் கூறப்படுகிறது. அதன்படி, இன்று திருப்பூர் வடக்கு காவல்நிலையத்திற்கு வந்த அன்னபூரணியிடம், மீண்டும் திருமுருகன்பூண்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்கும்படி போலீசார் கூறியுள்ளனர். 

இதனால், மனமுடைந்த அன்னபூரணி, போலீசார் அங்கும் இங்கும் தன்னை அலைக்கழிப்பதாக கூறியும், தனது கணவரை உடனடியாக மீட்டுத்தரப்படி கூறியும் திருப்பூர் வடக்கு காவல்நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, வடக்கு காவல்நிலைய போலீஸார், திருமுருகன்பூண்டி காவல்நிலையத்திற்கு தொடர்பு கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி கூறியதைத் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு அன்னபூரணி, போராட்டத்தைக் கைவிட்டார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...