திருப்பூர் : திருப்பூரில் மக்களுக்கு கல்வியை வழங்கும் நிகழ்ச்சியில், பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில் 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டது.

திருப்பூர் அரண்மனை புதூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் சார்பில் "கல்வி சீர் விழா" வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் பெற்றோர் மற்றும் மாணவ, மாணவிகள் தாரை தப்பட்டை முழங்க பள்ளிக்கு தேவையான நாற்காலிகள், புத்தகங்கள், தொலைக்காட்சிப் பெட்டி, மின்விசிறி உள்ளிட்ட பொருட்களை பள்ளிக்கு சீதனமாக வழங்கினர். இதில், பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், பெற்றோர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.