விரைவில் வீடுகள் இல்லாத பழங்குடியினருக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படும் : கூடலூர் வருவாய் கோட்டாட்சியர்

நீலகிரி : வீடுகள் இல்லாத பழங்குடியின மக்களுக்கு விரைவில் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் அறிவித்துள்ளார்.

நீலகிரி : வீடுகள் இல்லாத பழங்குடியின மக்களுக்கு விரைவில் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் அறிவித்துள்ளார். 

பந்தலூர் அருகே குந்தலாடி அரசு ஆரம்ப பள்ளியில் பழங்குடியினர் விழிப்புணர்வு மற்றும் குறை தீர்ப்பு முகாம் நடத்தப்பட்டது. கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் வருவாய்த்துறை ஏற்பாடு செய்த இந்த முகாமிற்கு வழக்கறிஞர் கணேசன் தலைமை தாங்கினார். வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி, கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து, இணை செயலாளர் பொன் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் பழங்குடியினர்களிடம் மனுக்களைப் பெற்று பேசியதாவது :- 

தற்போது 21-ம் நூற்றாண்டில் மக்கள் பங்கேற்புடன் மக்கள் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அரசு மக்களை தேடி செல்லும் நிலையில், மக்கள் சரியாக தங்கள் குறைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். அரசு மூலம் பழங்குடியினருக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அந்த அடிப்படையில், பழங்குடியினர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீடுகள் இல்லாத ஆதிவாசிகளுக்கு கணக்கெடுப்பு நடத்தப்பட்டு உள்ளது. ஆதிவாசிகளுக்கு வீடுகள் கட்டுவதில் பணம் பிரச்சனையாக இருப்பதால், ஒப்பந்ததாரர்கள் மூலம் வீடுகள் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உள்ளது. விரைவில் வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படும். 



குடிநீர் தேவைக்கு தற்போது ரூ. 1.50 கோடி நிதி நீலகிரிக்கு ஒதுக்கியுள்ளது. இதன்மூலம், குடிநீர் சார்ந்த பிரச்சனைகளுக்கு உள்ளாட்சிகள் மூலம் தீர்வு காணப்படும். நியாய விலை கடைகளில் தற்போது முழு அளவு அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறைகள் இருந்தால் தெரிவிக்க வேண்டும். படிப்புடன் விளையாட்டு போட்டிகளில் மாணவர்களைப் பங்கேற்க பெற்றோர்கள் உதவ வேண்டும். அரசு பணிகளில் சேர பழங்குடியினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. தற்போது வனத்துறையில் 99 காலிப்பணியிடங்களை பழங்குடியினருக்கு ஒதுக்கி உள்ளது. இதில், இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில், கூடலூரில் இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இதனை ஆதிவாசி மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், எனக் கூறினார். தொடர்ந்து, 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெற்று உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். 

நெலக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் அசோக், கிராம சுகாதார செவிலியர், குந்தலாடி தமிழ் சங்க செயலாளர் மற்றும் குந்தலாடி, ஒர்க்கடவு, தானிமூலா, பழையூர், கடலைகொல்லி, மங்கம்வயல், புத்தூர்வயல், அம்பலபாடி, குன்றிகடவு, நெல்லியாளம் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் ஆதிவாசி மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...