நீலகிரி : உதகையில் ஆட்டோக்கள் இயக்குவதில் பாரபாட்சம் காட்டுவதால் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாகக் கூறி, ஆட்டோ சங்கத்தை கண்டித்து பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் ஆதார் அட்டைகளை ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படை முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உதகை நகரில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் ஆட்டோ ரிக்ஷாக்கள் பயன்படுத்தி வருகின்றனர். உதகை நகரப் பகுதியில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எல்க்ஹில் பகுதியில் சுமார் 12 ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளனர். நகரப் பகுதியில் இருந்து இப்பகுதிக்கு செல்லக்கூடிய ஆட்டோ ஓட்டுநர்கள் 90 ரூபாய் முதல் அதிகபட்சம் 100 ரூபாய் வரை எல்க்ஹில் பகுதிக்கு வாடகைக்கு சென்று வருகின்றனர்.
இந்த சூழலில், எல்க்ஹில் பகுதியில் இருந்து நகர்ப்பகுதிக்கு வரும் எந்தவொரு வாடகையையும் எடுக்கக் கூடாது என எல்க்ஹில் பகுதி ஆட்டோ ஓட்டுநர்களை நகரப்பகுதியில் இருக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் மிரட்டுவதாகவும், மேலும், எல்க்ஹில் பகுதியில் தனியாக ஆட்டோ ஸ்டேண்ட் போடக் கூடாது எனக் கூறி அச்சுறுத்துவதாக கடந்த மாதம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மனு அளித்திருந்தனர்.

இந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக எல்க்ஹில் பகுதியில் ஸ்டேண்ட் அமைத்து இயக்கக் கூடாது என அறிவித்துள்ள ஆட்டோ சங்கத்தை கண்டித்தும், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் குடும்பத்துடன் வந்து ஆதார் அட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க முற்பட்டனர். அப்போது, உரிய நடவடிக்கையை எடுப்பதாக மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.