நீலகிரி : நீலகிரி மலை ரயிலுக்கு பாரம்பரிய அந்தஸ்து வழங்கிய தினம் குன்னூர் ரயில் நிலையத்தில் இன்று கொண்டாடப்பட்டது.

இந்தியாவில் ஓடும் 37384 ஒன்ற எண் கொண்ட எக்ஸ் கிளாஸ் என்ஜின் மட்டுமே நிலக்கரியைப் பயன்படுத்தி நீராவி என்ஜினாக இயக்கப்பட்டு, நூற்றாண்டுகளைக் கடந்தும் இயங்கும் நிலையில் உள்ளது. இது நீலகிரி மலைரயிலுக்கு கிடைத்த பெருமை எனலாம். 108 வளைவுகள், 250 சிறு மற்றும் பெரும் பாலங்கள், 16 குகைகள் என சுமார் 150 ஆண்டு காலமாக நீலகிரி மலைத்தொடரில் குழந்தை போல் தவழ்ந்து வரும் உலக புகழ்பெற்றது இந்த மலை ரயில். விண்ணை முட்டும் அளவிற்கு அழகிய மலைகள், கண்ணுக்கு எட்டும் தூரம் வரை அடர்ந்த வனங்கள், பார்க்கும் இடமெல்லாம் தேயிலைத் தோட்டங்கள், அழகிய நீர்வீழ்ச்சிகள் என பசுமை நிறைந்த நீலகிரி மலை தொடரில் மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை சுமார் 60 கி.மீ. தூரம் வரை 150 ஆண்டு காலத்திற்கும் மேலாக தவழ்ந்து வரும் நீலகிரி மலை ரயில் பயணம் செய்வது எண்ணற்ற புதிய அனுபவத்தை தரக் கூடியவையாகும்.

நீலகிரிக்கு வரக்கூடிய உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த 80 சதவீதம் சுற்றுலாப் பயணிகள் மலை ரயில் பயணத்தில் ஆர்வம் காட்டுவதால், இம்மலை ரயிலுக்கு உலக அளவில் தனி அந்தஸ்து உண்டு. இந்த மலைரயில் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை மட்டுமே நீராவி எஞ்சினில் இயக்கப்படுகிறது. உதகைக்கு பர்னஸ் ஆயில் மூலம் இயக்கப்படுகிறது. ஆசியாவிலேயே 19 கிலோ மீட்டர் வரை பல் சக்கரம் மலை ரயிலில் பயணம் செய்யும் நிமிடங்கள் வித்தியாசமானது. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பாழடைந்து வந்த ரன்னிமேடு, ஆடர்லி உட்பட பல்வேறு ரயில் நிலையங்கள் புத்துயிர் பெற்றுள்ளன. உதகை - கேத்தி மற்றும் குன்னூர் - ரன்னிமேடு வரையில் சிறப்பு குறுகிய தூர மலை ரயில் இயக்கி வருவது, ஒரே நிலக்கரி நீராவி என்ஜின் வெள்ளோட்டம் பார்த்தது ஆகியவை மலை ரயில் புத்துயிர் பெற மைல் கல்லாக அமைந்தது. மலை ரயிலில் 37384 என்ற எண் கொண்ட எக்ஸ் கிளாஸ் என்ஜின் மட்டுமே நிலக்கரியைப் பயன்படுத்தி நீராவி என்ஜினாக இயக்கப்பட்டு, நூற்றாண்டுகளைக் கடந்தும் இயங்கும் நிலையில் உள்ளது.

இந்த நிலையில், (15ம்தேதி) மலை ரயிலுக்கு பாரம்பரிய அந்தஸ்து வழங்கிய தினம் குன்னூர் ரயில் நிலையத்தில் கொண்டாடப்பட்டது. இதில், பங்கேற்ற கல்லூரி மாணவ, மாணவியர், பொதுமக்கள், கடந்த 1914ல் சுவிட்சர்லாந்தில் வடிவமைக்கப்பட்டு, 1918ல் இங்கு கொண்டு வரப்பட்ட நீராவி என்ஜினை மீண்டும் இயக்கவும் வலியுறுத்தினர்.