கோவை : கோழிக்கோடு இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் சார்பில் தலைமைப்பண்பு 4.0 பயிற்சி பட்டறை கோவையில் நடைபெற்றது.

தலைமைப் பண்பு குறித்த இந்தப் பயிற்சிப் பட்டறையில் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த தலைமை நிர்வாக இயக்குநர்கள், கல்வித்துறையாளர்கள், மேலாண்மை நிர்வாகிகள், தொழில்முனைவோர்கள் மற்றும் ஹெல்த் கேர் நிர்வாகிகள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இந்திய வர்த்தக சபையின் தலைவர் லட்சுமி நாராயணசாமி கூறுகையில், "கோவை மாநகர் தொழில்துறையில் தனித்துவம் வாய்ந்தது. வர்த்தக சமுதாயம் மற்றும் தொழில்முனைவோர்கள் மாநகரை மேம்படையச் செய்வதில் முக்கிய பங்காற்றி வருகின்றனர். 50,000 சிறு,குறு நிறுவனங்கள், 82 பொறியியல் கல்லூரிகள் மற்றும் பெரும்பாலான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. மேலும், கோவை கல்விக்கு சிறந்த ஸ்தலமாகவும், தொழில்துறை மையமாகவும் திகழ்கிறது," என்றார்.