கோவை : கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது காணாமல் போன மனநல நோயாளியை மீட்ட காவலருக்கு கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் பாராட்டு தெரிவித்தார்.

கடந்த ஜுன் மாதம் 06-ம் தேதியன்று கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குனியமுத்தூரை சேர்ந்த நூர்முகம்மது (19) என்பவர் காணாமல் போய் விட்டதாக அவரது தாயார் பந்தய சாலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இவ்வழக்கு தொடர்பாக காவல்நிலையத்தில் பணிபுரியும் சேகர் என்பவர் அவரது முகநூல் கணக்கிலும், வாட்ஸ்அப் குரூப்பிலும் தனிப்பட்ட முறையில் காணாமல் போன நூர்முகமதுவின் புகைப்படத்தையும், விபரங்களையும் பதிவு செய்து பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த இவரது முகநூல் நண்பர்கள் மற்றும் வாட்ஸ்அப் குழுவினர் காணாமல் போன நூர்முகமது கேரளா மாநிலம், கோட்டையம் மாவட்டம், கோட்டையம் கிழக்கு காவல்நிலையத்தில் இருப்பதாக தகவல் அளித்துள்ளனர்.
இத்தகவலின் பேரில் தலைமை காவலர் சேகர் உடனடியாக கோட்டையம் சென்று காணாமல் போன நூர்முகமதுவை மீட்டு, அவரது தாயாரிடம் ஒப்படைத்துள்ளார். தலைமைக் காவலர் சேகர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாதுரியத்துடனுடம், விரைவாகவும் காணாமல் போன நூர் முகமதுவை மீட்ட செயல் நூர்முகமதுவின் குடும்பத்தார் மற்றும் அப்பகுதி பொதுமக்களால் மிகவும் பாராட்டப்பட்டது. தலைமை காவலர் சேகரின் இப்பணியினை கோவை
மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் பாராட்டி சான்றிதழ் வழங்கியதுடன், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.