கோவை : ரத்தினபுரி பகுதியில் உள்ள தயிரிட்டேரி மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்திட வலியுறுத்தி முன்னாள் மாமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

49-வது வட்ட முன்னாள் மாமன்ற உறுப்பினர் மீனா லோகு மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். அதில், ரத்தினபுரி பகுதி தயிரிட்டேரி மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்திட துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என வலியுறுத்தப்பட்டது.
பின்னர், செய்தியாளர்களிடம் முன்னாள் மாமன்ற உறுப்பினர் மீனா லோகு கூறுகையில், "சென்னை மார்க்கமாக செல்லும் ரயில் தடத்தில் நாள் ஒன்றுக்கு 60-க்கும் மேற்பட்ட ரயில்கள் செல்வதால், இங்கு மேம்பாலம் கட்ட வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டு, 2009-ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டு பணிகள் துவங்கப்பட்டது. தற்போது, பணிகள் நிறைவடைந்த நிலையில், பாலம் திறக்கப்படாமல் இருக்கிறது. ஆனால், பொதுமக்கள் பாலத்தை பயன்படுத்தத் துவங்கி விட்டனர். இணைப்பு சாலைகள், மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை, நடைபாதை அமைப்பது போன்ற பணிகள் துவங்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் அவதிப்படுவதால் இப்பணிகளை விரைந்து முடித்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்தார்.