நீலகிரி : உதகை அருகே உள்ள பார்சன்ஸ் வேலி அணைப் பகுதியில் 8 முதல் 9 வயது மதிக்கத்தக்க புலி ஒன்று இறந்து கிடந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் உதகையில் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய பார்சன்ஸ் வேலி அணைப் பகுதியில் 8 முதல் 9 வயது மதிக்கத்தக்க புலி ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் புலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மாவட்ட வன அதிகாரி கூறும்போது, "இந்த புலி இறந்ததற்கான காரணம் என்ன..? ஆந்தராக்ஸ் போன்ற நோயினாலா..? அல்லது மற்ற வன விலங்குகளின் தாக்குதலாலா..? அல்லது யாரேனும் விஷம் வைத்து கொன்றார்களா என்பது குறித்து பிரேத பரிசோதனைக்குப் பின் விவரம் தெரிய வரும்," என்றார். மேலும், புலி இறந்தது குறித்து விசாரணை நடைபெறும் என மாவட்ட வன அதிகாரி குருசாமி தாளம் தெரிவித்தார்.