கோவையில் சட்டவிரோத ஆழ்துளை கிணறுகளால் விவசாய பயிர்கள் கருகுவதாக விவசாயிகள் மனு

கோவை : உரிய அனுமதியின்றி ஆழ்துளை கிணறுகள் அமைத்து லாரிகள் மூலம் தண்ணீரை விற்பனை செய்வதால் விவசாய பயிர்கள் கருகுவதாகக் கூறி விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை : உரிய அனுமதியின்றி ஆழ்துளை கிணறுகள் அமைத்து லாரிகள் மூலம் தண்ணீரை விற்பனை செய்வதால் விவசாய பயிர்கள் கருகுவதாகக் கூறி விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை அடுத்த பள்ளப்பாளையம் அருகே உள்ள ஒட்டர்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது :- தங்கள் பகுதியில் மாட்டுப் பண்ணை அமைக்க அனுமதி பெற்றுக்கொண்டு, பாலசுப்ரமணியன் என்பவர் ஆழ்துளை கிணறுகளை அமைத்துள்ளது. ஆனால், விவசாயம் எதுவும் செய்யாமல் ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து தண்ணீரை எடுத்து லாரிகள் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். இதனால், அப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயக் கிணறுகளில் தண்ணீர் வற்றி வருகின்றது. இதன் காரணமாக, விவசாய பயிர்களான தென்னை, வாழை, கரும்பு ஆகியவை கருகி வருகிறது. விவசாயிகள் உடனடியாக தண்ணீர் விற்பனையை தடுக்க வேண்டும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக தாசில்தார் மூலம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதியளித்தார், என விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...