கோவை : கடந்த மாதம் பாலக்காடு நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி வேன் விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களது குடும்பத்திற்கு ரூ. 15 லட்சம் நிவாரணமாக நிவாரண நிதியாக வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 30-ம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்த கோவை மாவட்டம் உக்கடம் கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த 12 பேரின் குடும்பத்தினருக்கு நேற்று முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 15 லட்சத்திற்கான காசோலையினை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கி ஆறுதல் கூறினார். இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், வட்டாட்சியர்கள் தேவநாதன், மகேஷ்குமார் மற்றும் அரசு அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது :- கோவை மாவட்டம், கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த பைரோஜி பேகம் என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 12 நபர்கள் ஒரு குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆம்னி வேனில் பாலக்காடு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, ஜுன் 30-ம் தேதி அதிகாலை எதிர்பாராத விதமாக, ஏற்பட்ட சாலை விபத்தில் வேன் ஓட்டுநர் ஷாஜஹான், பைரோஜி பேகம், ரியான், ஷெரின், அப்னா பிர்ஜா ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயும், மொகம்மது ரித்வான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மொத்தம் 6 நபர்கள் உயிரிழந்தனர். மேலும், நபர்கள் படுகாயமடைந்தார்கள்.
இத்துயர சம்பவத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, பாதிக்கப்பட்டோர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்த 6 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு 6 நபர்களுக்கு தலா ரூ.50,000/- யும், வழங்க அதனடிப்படையில் சாலை விபத்தில் உயிரிழந்த 6 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சத்திற்கான காசோலையும், பலத்த காயமடைந்தவர்களுக்கு 6 நபர்களுக்கு தலா ரூ. 50,000-த்திற்கான காசோலையும் என மொத்தம் ரூ.15 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது, என தெரிவித்தார்.