கோவை : மேட்டுப்பாளையத்தில் புதியதாக கட்டப்பட்டு வந்த கட்டிடத்திற்கு எலக்ட்ரிசன் வேலைக்கு வந்த தொழிலாளியை குடிபோதையில் உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் உள்ள ஓடந்துரை பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் புதிதாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதில், 15 தொழிலாளர்கள் கட்டிட பணி மற்றும் எலக்ட்ரிசன் பணி செய்து வருகின்றனர். இந்தப் பணிக்காக, கரூர் மாவட்டம் தான்தோன்றி மலை பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகரன் என்பவரது மகன் சுந்தரேசனும் (26), இவரது நண்பரான பழனியாண்டியும் கடந்த 3 தினங்களுக்கு முன்பு கரூரில் இருந்து வந்துள்ளனர். நேற்று சம்பளம் பெற்று 10 தொழிலாளர்கள் அங்கு இருந்து சொந்த ஊருக்கு சென்ற நிலையில், மீதம் இருந்த 5 தொழிலாளர்கள் அந்த கட்டிடத்தில் இன்று மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது, சுந்தரேசன் அங்கு வேலை செய்யும் 3 பேரின் செல்போன்களை குடிபோதையில் பறித்து வைத்துள்ளார்.
இதனையடுத்து, மூவரும் எங்களது செல்போன் எங்கே என்று கேட்டு அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, அங்கிருந்த உருட்டுக் கட்டையை எடுத்து சுந்தரேசனை மூவரும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த சுந்தரேசன் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். பின்னர், தாக்குதலில் ஈடுபட்ட மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து, இன்று விடுமுறை என்பதால் மாலை கட்டிடத்திற்கு வந்த பார்த்த ஒப்பந்ததாரர், சுந்தரேசன் மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுந்தரேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின்னர், இது குறித்து மேட்டுப்பாளையம் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மூவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.