கணியூரில் தமிழர்களின் பாரம்பரிய நடனமான ஒயிலாட்டம் அரங்கேற்றம்

கோவை : கணியூர் பகுதியில் இன்று தமிழர்களின் பாரம்பரிய நடனமான ஒயிலாட்டம் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

கோவை : கணியூர் பகுதியில் இன்று தமிழர்களின் பாரம்பரிய நடனமான ஒயிலாட்டம் அரங்கேற்றம் செய்யப்பட்டது.



வண்ண உடைகளை உடுத்தி அமர்ந்தும், நிமிர்ந்தும் இலவகமாக வளைந்தும் ஆடும் இந்த கலைதான் ஒயிலாட்டம். தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றாகவும், கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமான இந்த ஒயிலாட்டத்தை, தற்போது கொங்கு மண்டல மக்கள் ஆர்வமுடன் கற்று வருகின்றனர். கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த கணியூர், சந்தோஷ் நகர் பகுதியில் ஒயிலாட்ட அரங்கேற்றம் இன்று நடைபெற்றது. இதில் 3 வயது முதல் 60 வயது வரை உள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் சிறியவர்கள் என 60 நபர்கள் அரங்கேற்றம் செய்தனர். அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றும் கனகராஜ், இலவசமாக கிராமந்தோறும் சென்று ஒயிலாட்ட கலையை வளர்த்து வருகிறார்.



கிராமிய பாடலுடன் மெதுவாக ஆரம்பித்து வேகமெடுக்கும் ஒயிலாட்டம், தொடர்ச்சியாக 3 மணி நேரம் நடைபெற்றது. ஒயிலாட்டம் ஆடும் போது, உடலையும், உள்ளத்தையும் ஒருங்கிணைந்து புத்துணர்வு ஏற்படுவதாக கலைஞர்கள் கூறுகிறார்கள். கடந்த 9 ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒயிலாட்டம் கலைஞர்கள் உருவாகி இருப்பதாகவும், வரும் மாதங்களில் இந்த கலையை பல நாடுகளில் பரப்பும் வகையில், அங்கு சென்று ஒயிலாட்ட நிகழ்ச்சியை நடத்த உள்ளதாகவும், இந்த கலையை தமிழர்கள் உள்ள நாடுகளில் பரப்ப திட்டமிட்டுள்ளதாக ஆசிரியர் கனகராஜ் தெரிவித்தார்.



Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...