திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே காரும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 4 பேர் பலி உயிரிழந்தனர்.

கோவை மாவட்டம் சூலூரைச் சேர்ந்தவர் முரளிக்கண்ணன். இவர் அங்குள்ள தனியார் நூற்பாலையில் வேலை செய்து வருகிறார். வேலை செய்யும் சொர்ண மூர்த்தி, நடராஜ், சுதர்சன், பாலச்சந்திரன், சுரேஷ் ஆகியோருடன் காரைக்காலில் உள்ள தனது நண்பரின் வீட்டுக்கு இரவு புறப்பட்டுள்ளனர். நேற்று நள்ளிரவு கார் வெள்ளகோயில் அடுத்த வேலப்ப நாயகன் வலசு பிரிவு என்ற இடத்தில் சென்ற போது, நிலைதடுமாறி எதிரே திருச்சியிலிருந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் முரளிகண்ணன், சொர்ண மூர்த்தி, நடராஜ், சுதர்சன் ஆகியோர் காருக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். உடன் சென்ற பாலசந்தர் மற்றும் சுரேஷ் ஆகியோரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இங்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.