இந்திய இறையாண்மைக்கு எதிராக முகநூலில் கருத்து பதிவிட்டதாக கோவையில் இளைஞர் கைது

கோவை : கோவையில் முகநூலில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில், இந்திய இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக கருத்துக்களை பதிவு செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

கோவை : கோவையில் முகநூலில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில், இந்திய இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக கருத்துக்களை பதிவு செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

கோவை மாநகர காவல்துறையினர் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுவோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதேபோல, முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும், மற்ற மதத்தினரை புண்படுத்தும் வகையிலும், இந்திய இறையாண்மைக்கு எதிராக தனது கருத்துக்களை பதிவிடுபவர்களையும் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், கண்காணிக்கப்படும் நபர்கள் மீது தவறு இருக்கும் பட்சத்தில் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை இராமநாதபுரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியான கருணாநிதி நகரில் வசித்து வரும் பழனிச்சாமியின் மகன் மணிகண்டன் (37) என்பவர் தனது முகநூலில் ஹிந்து, முஸ்லிம் மதத்தினரிடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும், குறிப்பிட்ட மதத்தினரை கொலை செய்து விடுவேன் எனவும் பதிவிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் மற்றும் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் ஆகியோரின் உத்தரவின் பேரில், இராமநாதபுரம் காவல் ஆய்வாளர் லதாவின் தலைமையிலான குழுவினர் இந்து அமைப்பைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்தனர். மேலும், இவர் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டல், மதக் கலவரத்தை தூண்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 

கோவையில் இது போன்று முகநூல் வாட்ஸப்கள் மூலம் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் எவரேனும் செயல்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...