கணேசபுரத்தில் இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம், படிப்பகத்தை திறந்து வைத்தார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

கோவை : கோவை மாநகராட்சி 100-வது வார்டு மேட்டூர் கணேசபுரத்தில் இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம், படிப்பகம் ஆகியவற்றை திறந்துவைத்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, இரண்டு புதிய பேருந்து வழித்தடங்களை துவக்கி வைத்தார்.

கோவை : கோவை மாநகராட்சி 100-வது வார்டு மேட்டூர் கணேசபுரத்தில் இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம், படிப்பகம் ஆகியவற்றை திறந்துவைத்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, இரண்டு புதிய பேருந்து வழித்தடங்களை துவக்கி வைத்தார்.

​கோவை மாநகராட்சி 100-வது வார்டு மேட்டூர் கணேசபுரத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவினையொட்டி ரூ. 10 லட்சம் மதிப்பில் இறகு பந்து விளையாட்டு உள்அரங்கத்தையும், ரூ. 3 லட்சம் மதிப்பில் படிப்பகத்தையும் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத், சட்டமன்ற உறுப்பினர் ஏ.சண்முகம், மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தார். ​மேலும், காந்தி பூங்காவிலிருந்து கணேசபுரம் மற்றும் ஒண்டிப்புதூரிலிருந்து கணேசபுரம் ஆகிய இரண்டு புதிய பேருந்து வழித்தடங்களுக்கான பேருந்துகளின் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி துவக்கி வைத்தார்.



அப்போது, அவர் பேசியதாவது :- புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் நடைபெறுகிற தமிழக அரசு, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் தலைமையில் சிறப்பாக பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கோவை மாநகராட்சியில் பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக ஏராளமான பாலங்கள் மற்றும் சாலைகள் அமைக்கும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் வெள்ளலூரில் புதிய பேருந்து நிலையம் ரூ. 178.62 கோடி மதிப்பில் அமைக்க உத்தரவிட்டுள்ளார். மேலும், கோவை மாநகராட்சியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

​கோவை அரசு தலைமை மருத்துவமனையில் இதய நோய் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க நவீன கருவிகள் சுகாதாரத் துறை அமைச்சர் முன்னிலையில் சமீபத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மக்கள் நலன் காக்கும் இதுபோன்ற பல்வேறு பணிகளை கோவை மாநகராட்சியில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது, என்றார்.



இந்நிகழ்ச்சியில், உதவி ஆணையர் டி.ஆர்.ரவி, செயற்பொறியாளர் ஞானவேல், மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன், உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் வேணுகோபால் மற்றும் அலுவலர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...