குனியமுத்தூர் அருகே பல கோடி ரூபாய் மோசடி செய்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்

கோவை : குனியமுத்தூர் அருகே யூரோப்பியன் பாண்ட் என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்த நபரை பாதிக்கப்பட்ட தரப்பினர் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கோவை : குனியமுத்தூர் அருகே யூரோப்பியன் பாண்ட் என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்த நபரை பாதிக்கப்பட்ட தரப்பினர் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

குனியமுத்தூர் அருகே உள்ள பி.கே. புதூர் தோட்ட வீதியைச் சேர்ந்த வேலுச்சாமியின் மகன் செந்தில்குமார் (46). இவர் மற்றும் இவரது உறவினர்கள் சிலர் இணைந்து யூரோப்பியன் பாண்ட் என்ற பெயரில் ஐரோப்பிய நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணம் முதலீடு செய்வதாக, கடந்த சில வருடங்களாக பல்வேறு நபர்களிடம் பணம் வசூல் செய்து வந்துள்ளனர். இப்படி கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களிடம் ஒரு லட்ச ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்து, அவர்களுக்கு ஒரு கோடி முதல் ஒன்றரை கோடி வரை தருவதாக தெரிவித்துள்ளனர்.



அதேபோல, கவர்ச்சியான விளம்பரங்கள் மூலமும் டெல்லி, பாம்பே போன்ற சுற்றுலா தளங்களுக்கு அழைத்துச் சென்றும் ஆடம்பர வாழ்க்கையை காட்டி பண ஆசையை தூண்டியுள்ளனர். இந்த நிலையில், இந்த ஆடம்பர செலவுகளில் மயங்கிய பொதுமக்கள், செந்தில்குமாரிடம் லட்சக்கணக்கான தொகையை கொடுத்துள்ளனர். ஆனால், பணத்தை கொடுத்து மாதக் கணக்காகியும், பல்வேறு காரணங்களை சொல்லி கொடுத்த பணத்தை தராமல் ஏமாற்றி வந்ததால், பாதிக்கப்பட்டவர்கள் செந்தில் குமார் மீது குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த நிலையில், இன்று திடீரென பாதிக்கப்பட்ட ஒரு தரப்பினர் செந்தில் குமாரை அவரது வீட்டில் வைத்து பிடித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர், குனியமுத்தூர் போலீசார் மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், இந்த மோசடியானது சதுரங்க வேட்டை சினிமா பாணியில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...