தமிழகம் முழுவதும் கோவில்களில் ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை : மேட்டுப்பாளையம் வன பத்திரகாளியம்மன் கோவில் ராஜகோபுர பணிகளை விரைந்து முடிக்க கோரியும், கோவில்களில் ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரியும் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை : மேட்டுப்பாளையம் வன பத்திரகாளியம்மன் கோவில் ராஜகோபுர பணிகளை விரைந்து முடிக்க கோரியும், கோவில்களில் ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரியும் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற வன பத்திரகாளியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு ஏழு நிலை ராஜகோபுரம் கட்ட இரண்டு ஆண்டுக்கு முன் பூமி பூஜை நடத்தி பணிகள் துவங்கிய நிலையில், முதல்கட்ட பணியுடன் அப்பணிகள் முடங்கியுள்ளன. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஏமாற்றம் அடைவதுடன், ராஜ கோபுர பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்கள் ஆக்கரமிப்பு செய்வதை தடுக்கவும், ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் இந்து முன்னணி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.



மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தின் முன்பு நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்திற்கு கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, 40 கோடிக்கும் மேல் கோவிலுக்கு சொந்தமாக பணம் இருந்தும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தராமல் பக்தர்கள் அவதிப்படுவதாக குற்றம்சாட்டினர். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் அறங்காவலர் குழு நியமித்துள்ள நிலையில், வனபத்ரகாளியம்மன் கோயிலுக்கு மட்டும் இன்னும் அறங்காவலர்கள் நியமிக்கப்படாமல் இருப்பதற்கு ஆர்ப்பாட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 

மேலும், கட்டண தரிசனம் என்ற பெயரில் பக்தர்கள் மூலம் தமிழகம் முழுவதும் கொள்ளையடிக்கப்படுவதாக குற்றம்சாட்டிய நிலையில், கேரளா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களில் இலவச தரிசன முறை உள்ளது போல் தமிழகத்திலும் இலவச தரிசன முறையை அமல்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...