சந்திராயன் 2 ஏவுவதற்கான கவுன்ட்டவுன் இன்று தொடக்கம் : நாளை விண்ணில் பாய்கிறது

ஆந்திரா : நிலவின் தென்துருவ பகுதிக்கு சந்திராயன் 2 விண்கலம் ஏவப்படுவதற்கான கவுன்ட்டவுன் இன்று காலை தொடங்கியது.

ஆந்திரா : நிலவின் தென்துருவ பகுதிக்கு சந்திராயன் 2 விண்கலம் ஏவப்படுவதற்கான கவுன்ட்டவுன் இன்று காலை தொடங்கியது.

ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திராயன் 2 விண்கலம் நாளை விண்ணில் ஏவப்படும் நிலையில், இதற்கான கவுன்ட்டவுன் இன்று காலை தொடங்கியது. 

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் சார்பில் நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008ம் ஆண்டு சந்திராயன் விண்கலத்தை அனுப்பியது. நிலவின் மேற்பரப்பை சுற்றி வந்து ஆய்வு செய்த அந்த விண்கலம், நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை உறுதி செய்து படம் எடுத்து அனுப்பியது. சந்திராயன் திட்டம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் நோக்கில் சந்திராயன் 2 திட்டத்தை செயல் படுத்த இஸ்ரோ முடிவு செய்தது. 

இதனைத் தொடர்ந்து, அதிநவீன வசதிகளுடன் ரூ.610 கோடி செலவில் சந்திராயன் 2 விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திராயன் 2 விண்கலம் நாளை அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. ராக்கெட் புறப்படுவதற்கான 20 மணி நேர கவுன்ட்டவுன் இன்று காலை 6.51 மணிக்கு தொடங்கியது

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...