குன்னூர் சிம்ஸ் பூங்கா பழப்பண்ணையில் பெர்சிமன் பழத்தின் சீசன் துவக்கம் : ஆர்வத்துடன் வாங்கி செல்லும் சுற்றுலாப் பயணிகள்

நீலகிரி : குன்னூர் சிம்ஸ் பூங்கா பழப்பண்ணையில் ஜப்பான் நாட்டின் தேசிய பழமான பெர்சிமன் பழத்தின் சீசன் துவங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி : குன்னூர் சிம்ஸ் பூங்கா பழப்பண்ணையில் ஜப்பான் நாட்டின் தேசிய பழமான பெர்சிமன் பழத்தின் சீசன் துவங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையில் பேரி, ஆரஞ்சு, பீச், பிளம், எலுமிச்சை, லிச்சி உள்ளிட்ட ஏராளமான பழ மரங்கள் உள்ளன. இதில், அரிய வகை "பெர்சிமன்' பழ மரங்களும் உள்ளன. இப்பூங்காவில் 109 பெர்சிமன் பழ மரங்கள் உள்ளன. இம்மரங்களில் தற்போது சீசன் துவங்கியுள்ளது. பெர்சிமன் பழங்கள் கொத்துக் கொத்தாக காய்த்து தொங்குகின்றன.



பொதுவாக, ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் வரை பெர்சிமன் பழ சீசன் இருக்கும் . ஆஸ்திரேலியாவை தாயகமாக கொண்ட இப்பழம், ஜப்பான் நாட்டின் தேசிய பழமாகவும் உள்ளது. தக்காளி போன்ற தோற்றத்தை கொண்ட இப்பழத்தில் வைட்டமின் "ஏ' மற்றும் "பி' சத்து நிறைந்துள்ளது. இப்பழங்கள் மற்ற பழங்களை போன்று மரத்திலேயே பழுப்பதில்லை. மாறாக, காய் வடிவில் பறிக்கப்படும் இப்பழத்தை "எத்தனால்' என்ற திரவத்தில் ஊற வைத்தால் , இரண்டு நாள் கழித்து தான் பழுக்கும்.



தென் மாநில அளவில் குன்னூர் சிம்ஸ் பூங்கா தோட்ட கலைப் பண்ணையில் மட்டும் தான் இப்பழ மரங்கள் உள்ளன. இப்பழங்கள் கிலோ 150 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. பழ மர நாத்துகளும் தோட்டக்கலைப் பண்ணையில் விற்கப்படுகின்றன. பெர்சிமன் பழ சீசன் துவங்கியுள்ளது குன்னூர் சிம்ஸ் பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்சியை அளித்துள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...