கோவை மாவட்ட சட்டப்‌பணிகள்‌ ஆணைக்‌ குழுவின் மூலம் 4,196 வழக்குகளுக்கு தீர்வு

கோவை : கோவையில் இன்று நடைபெற்ற மாவட்ட சட்டப்‌பணிகள்‌ ஆணைக்‌ குழுவின் மூலம் 4,196 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

கோவை : கோவையில் இன்று நடைபெற்ற மாவட்ட சட்டப்‌பணிகள்‌ ஆணைக்‌ குழுவின் மூலம் 4,196 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. 



தேசிய சட்டப்‌ பணிகள்‌ ஆணைக்குழு உத்தரவின்படி, கோவை மாவட்ட சட்டப்‌ பணிகள்‌ ஆணைக்‌ குழு தலைவர்‌ மற்றும்‌ முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஆர்‌. சக்திவேல்‌ தலைமையில்‌ மற்றும்‌ செயலாளர்‌ முதுநிலை சார்பு நீதிபதி என்‌. ஷர்மிளா அவர்கள்‌ முன்னிலையில்‌ இன்று காலை 10.00 மணியளவில்‌ கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில்‌ மக்கள்‌ நீதிமன்றம்‌ நடத்தப்பட்டது. இம்மக்கள்‌ நீதிமன்றத்தில்‌ நிலுவையிலுள்ள சமரசம்‌ செய்யக்‌ கூடிய, சிறு குற்ற வழக்குகள்‌, காசோலை வழக்குகள்‌, வாகன விபத்து வழக்குகள்‌, சிவில்‌ வழக்குகள்‌, நில ஆர்ஜித வழக்குகள்‌ மற்றும்‌ தொழிலாளர்‌ சம்மந்தப்பட்ட வழக்குகள்‌ மற்றும்‌ நிலுவையில்‌ இல்லாத வழக்குகள்‌ என மொத்தம்‌ 10,867 வழக்குகள்‌ விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 4,196 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன்‌ மொத்தத்‌ தீர்வு தொகை ரூ..23,66,06,315 ஆகும்‌.

இம்மக்கள்‌ நீதிமன்றத்தில்‌ நீதிபதிகள்‌ எம்‌. குணசேகரன்‌, பி. முருகேசன்‌, சி. சஞ்சய்பாபா, ௭. மணிமொழி, பூரண ஜெய ஆனந்த்‌, மலர்‌ வாலன்டினா, ஜெ. ராதிகா, எஸ்‌. கோவிந்தராஜன்‌, முகம்மது பரூக்‌, எஸ்‌. நாகராஜன்‌, எம்‌. அகிலா சாலினி, எஸ்‌. ரவி மற்றும்‌ ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள்‌ எஸ்‌.ஏ. ஸ்ரீராமுலு, வி.ராமசாமி, ஆர்‌. தண்டபாணி, ராமசாமி, ஆர்‌. ராஜூ மற்றும்‌ பட்டியல்‌ வழக்கறிஞர்கள்‌ மூலம்‌ இம்மக்கள்‌ நீதிமன்றத்தில்‌ வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.



இம்மக்கள்‌ நீதிமன்றத்தில்‌ இரண்டாவது கூடுதல்‌ சார்பு நீதிமன்றத்தில்‌ நிலுவையிலிருந்த நில ஆர்ஜித வழக்கு ஒன்றில்‌ ராமகிருஷ்ணன் மற்றும்‌ கோபாலகிருஷ்ணன்‌ என்பவர்களுக்கு இந்திய உணவு கழகத்திடமிருந்து ரூபாய்‌. 23,21,541-க்கான காசோலையை கோவை மாவட்ட சட்டப்‌ பணிகள்‌ ஆணைக்‌ குழு தலைவர்‌ மற்றும்‌ முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஆர்‌. சக்திவேல்‌ அவர்களால்‌ மனுதாரருக்கு வழங்கப்பட்டது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...