நீலகிரி : காட்டு யானைகளின் ஊடுருவலை தடுக்கும் முயற்சியாக தொரப்பள்ளி வனத்துறை சோதனைச் சாவடியில் இரு கும்கி யானைகள் முகாமிட்டுள்ளன.

கூடலூரை அடுத்துள்ள தொரப்பள்ளி குனில்வயல், ஏச்சம்வயல், வடவயல், மொளப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் முதுமலை புலிகள் காப்பக வன எல்லையை ஒட்டி அமைந்துள்ளன. இதன் காரணமாக, இப்பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டமும் அதிகரித்து உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் குனில்வயல் பகுதியில் காட்டு யானை ஒன்று பால் சேகரிக்கும் ஜிப்பை கவிழ்த்தியது. இதேபோல், கடந்த வருடம் பள்ளி குழந்தைகளை விரட்டியுள்ளது. மேலும், விவசாயப் பயிர்களையும், விவசாயிகளின் உடமைகளையும் சேதப்படுத்தி வருகின்றது.

இதனால், பொதுமக்களும், விவசாயிகளும் அடிக்கடி போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் அனைத்து தரப்பினர் அடங்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், தொரப்பள்ளி சோதனைச்சாவடியில் கும்கி யானைகளை நிறுத்தி வனப்பகுதியில் இருந்து வரும் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தொரப்பள்ளி சோதனைச்சாவடியில் கடந்த மூன்று நாட்களாக ஜம்பு மற்றும் வசீம் ஆகிய இரண்டு கும்கி யானைகள் நிறுத்தப்பட்டு உள்ளன. அத்துடன் வனத்துறை ஊழியர்கள், பணியாளர்கள், யானைகள் அகழிகளை கடந்து கிராமங்களுக்குள் நுழையும் பகுதிகளில் இரவு வேளைகளிலும், பகல் நேரத்திலும் நெருப்பு மூட்டி கண்காணித்து வருகின்றனர். அதே நேரத்தில், ஒரு சில விவசாயிகள், தங்களது விவசாய இடங்களை சுற்றிலும் சூரிய ஒளி மின்வேலி அமைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், “விவசாயிகள் தரப்பில் விவசாய நிலங்களை ஒட்டிய முதுமலை புலிகள் காப்பக வன எல்லையை ஒட்டி அகழி அமைத்தும், இருக்கும் அகழிகளை பராமரித்தும், அதனை ஒட்டி மின்வேலியும் அமைத்து தர கோரிக்கை விடுத்துள்ளோம். அதிகாரிகள் தரப்பிலும் எங்களது கோரிக்கையை ஏற்று விரைவாக இப்பணியை செய்து முடிக்க உத்தரவாதம் அளித்துள்ளனர். எனவே, காட்டு யானைகள் நிரந்தரமாக ஊருக்குள் வருவதை தடுக்கும் வழிகளை வனத்துறையும், மாவட்ட நிர்வாகமும் விரைந்து செயல்படுத்த வேண்டும்,” என தெரிவித்துள்ளனர்.