நீலகிரி : உதகையில் மாவட்ட அளவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

மலை மாவட்டமான நீலகிரியில் மாவட்டத்தில் ஆண்டுதோறும் சதுரங்க விளையாட்டு சங்கம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையேயான சதுரங்க போட்டி நடத்துவது வழக்கம். இதே போல், இந்த ஆண்டும் உதகையில் உள்ள தனியார் பள்ளியில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது.

மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு கோப்பையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள மாவட்ட சதுரங்க விளையாட்டு சங்கம் ஏற்பாடுகளை செய்துள்ளது. இன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட நிலையில், பெரும்பாலான மாணவ, மாணவிகள் அரசு பள்ளியில் இருந்து கலந்து கொண்டது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.