நீலகிரி : உதகையில் வளர்ப்பு நாய் கடித்ததால் தட்டிக் கேட்டவர்களை நாயை விட்டுத் துரத்தி அடித்த பெண்மணியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் உதகை கணேஷ் தியேட்டர் அருகே இன்று மாலை கோவா பதிவு எண் கொண்ட காரை பெண் ஒருவர் ஓட்டி வந்தார். காரில் அவரது குழந்தையும், ராட்வீலர் ரக நாயும் இருந்தது. காரில் இருந்து இறங்கிய அந்த பெண் அருகே இருக்கும் சலவை கடைக்கு சென்றார். அப்போது, விஜய் என்பவர் காரை கடந்து செல்லும் போது, காருக்குள் இருந்த நாய் விஜியின் தோள்பட்டையை கடித்து குதறியது. இதனால், விஜியின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு கூடினர். இது குறித்து கேட்டபோது, அந்தப் பெண் கோபம் அடைந்து அவரை ஆங்கிலத்தில் வசைபாடியவாறே, காருக்குள் இருந்த நாயை வெளியே கொண்டு வந்து அவரையும் பயமுறுத்தினார்.

இந்த சம்பவத்தால் கோபமடைந்த பொதுமக்கள் பெண்ணின் காரை வெளியே செல்லவிடாமல் ஜாக்கி வைத்து ஏற்றி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் வருவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், அந்த பெண் மீண்டும் மீண்டும் நாயை ஏவவிட்டு பொதுமக்களை பயமுறுத்திக் கொண்டிருந்தார். இதனால், பொதுமக்கள் தற்காப்புக்காக கல் மற்றும் கட்டைகளுடன் ஆத்திரத்தில் இருந்தனர். ஒரு வழியாக வந்த காவல் துறையினர், காயம்பட்ட விஜய்யை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, அந்த பெண்ணை விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து சென்றனர்.