நீலகிரி : உதகை, குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ளப் பகுதிகளில் இன்று மாலை திடீரென தொடர்ந்து மழை பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

உதகையில் வழக்கமாக பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போனதால் இந்த மழையினை நம்பி கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு மலைக் காய்க்கறிகளை பயிரிட்டிருந்த விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் இன்று உதகை, குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ளப் பகுதிகளில் பரவலாக மழைப் பெய்தது. இந்த மழை விவசாயத்திற்கு ஏற்றதாக உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணைப் பகுதிகளிலும் மழைப் பொழிவு இருந்ததால், அணைகளின் நீர்மட்டமும் கணிசமாக உயரும் என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.