கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் 79,33,140 ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளை ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார்.

மகளிர் மேம்பாட்டுத் துறை சார்பில் 100 பயனாளிகளுக்கு இரு சக்கர வாகனமும், மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில் 21 பேருக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, 26 பேருக்கு காதொலி கருவியும், சமூக நலத்துறை சார்பில் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 50 பேருக்கு வைப்பு நிதி ரசீது ஆகியவை வழங்கப்பட்டன. மேலும், வருவாய் துறை சார்பில் மின்சாரம் தாக்கி இறந்தவர்களின் குடும்பதிற்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து உதவி தொகையும், மதுக்கரை கல்லு குழியில் தண்ணீரில் மூழ்கி இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு நிவாரண தொகை என 79,33,140 ரூபாய்க்கான நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசுகையில், “கோவை மாவட்டத்திற்கு தேவையான அனைத்து திட்டங்களை தமிழக செயல்படுத்தி வருகிறது. கோவை விமான நிலைய விரிவாக்கம் ஆகும் போது இங்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும். என்றார்.

இதன் பின்னர், மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட மாதிரியை பார்வையிட்ட அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பிரச்சார வாகனங்களை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில், மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜூனன், ஆறுகுட்டி, கனகராஜ், எட்டிமடை சண்முகம், கஸ்தூரி வாசு, மாவட்ட ஆட்சியர் ராஜாமணி, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காலை 11 மணிக்கே பயனாளிகள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்க வேண்டுமென துறைகள் சார்பில் கூறப்பட்டு இருந்தது.

இதனால், பெரும்பாலானோர் அங்கு வந்து காத்து இருந்தனர். ஆனால், அமைச்சர் மடிகணனி வழங்கும் விழா, அக்ரி இண்டெக்ஸ் நிகழ்ச்சி முடித்து மூன்றரை மணி அளிவில் வந்து நல திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது, வழக்கம் போல் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்ததால் கால தாமதாகி விட்டதாக அமைச்சர் தெரிவித்தார். துறை சார்ந்த அதிகாரிகள் இதனை முன் கூட்டியே அறிவித்து இருக்கலாம் என முனுமுனுத்தபடியே நலத்திட்ட உதவிகளை பெற்ற பயனாளிகள் புலம்பியபடியே சென்றனர்.