கோவை : மேட்டுப்பாளையத்தில் புகழ்பெற்ற வனபத்திரகாளியம்மன் ஆடி குண்டம் திருவிழாவையொட்டி நடைபெற்ற அனைத்து அரசு துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தில், வனவிலங்கு நடமாட்டத்தை கண்காணிக்க கூடுதல் ஆட்களை நியமிக்க வனத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றங்கரை ஓரத்தில் எழுந்தருளியுள்ள 1,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு வன பத்திரகாளியம்மன் கோவில் ஆடி குண்டம் திருவிழா வருகின்ற 23ஆம் தேதி பூச்சாட்டுடன் துவங்க உள்ளது. கொங்கு மண்டலத்தின் மிகவும் பிரசித்திபெற்ற சுயம்பு அம்மனாக திகழும் இந்த ஆடி குண்டம் திருவிழா நிகழ்ச்சியில், ஆண்டுதோறும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு குண்டம் இறங்குவார்கள். இந்த நிலையில், விழா முன்னேற்பாடுகள் குறித்தும், பக்தர்களின் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து அனைத்து அரசு துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் கோவை மாவட்ட வருவாய் கோட்டாச்சியர் சுரேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வனத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, தீயணைப்பு, காவல்துறை மின்சாரம், மருத்துவக்குழு உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
அடர்ந்த வனப்பகுதியினை ஒட்டி அமைந்துள்ள இப்பகுதியில் பக்தர்கள் அதிகம் கூடும்போது, வனவிலங்குகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வனத்துறை சார்பில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும், அவர்கள் ரோந்து பணியினை மேற்கொள்வதுடன், வனத்தை விட்டு காட்டுயானைகள் வெளியே வராமல் எல்லையிலேயே தடுத்து கோவிலுக்குள் நுழையாமல் தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தபட்டது. மேலும், பக்தர்கள் அதிகம் கூடுவதால் அசம்பாவித சம்பவங்களை தடுக்க 100 கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்துவதுடன், 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும், பக்தர்கள் புனித நீராடும் பவானி ஆற்றில் பாதுகாப்பாக நீராடவும், ஆற்றில் திடீரென தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என்பதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கினை கண்காணிக்க உரிய அதிகாரிகளை நியமித்து கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே. சின்னராஜ், பரம்பரை வசந்தா, வட்டாட்சியர் சாந்தாமணி உட்பட அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.