உதகையில் 20 இடங்களில் வருகிறது குடிநீர் ஏ.டி.எம். : ரூ. 5 செலுத்தினால் ஒரு லிட்டர் தண்ணீர்

நீலகிரி : ரூ. 5 செலுத்தினால் ஒரு லிட்டர் குடிநீர் கிடைக்கும் வகையிலான ஏ.டி.எம். மையங்கள் உதகையில் 20 இடங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நீலகிரி : ரூ. 5 செலுத்தினால் ஒரு லிட்டர் குடிநீர் கிடைக்கும் வகையிலான ஏ.டி.எம். மையங்கள் உதகையில் 20 இடங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.



நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழல் மற்றும் வனப்பகுதிகளை பாதுகாக்கும் பொருட்டு, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மே மாதம் 29-ந் தேதி வெளியிட்ட உத்தரவில், நீலகிரியில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டு உள்ள குளிர்பானங்கள் மற்றும் உணவு பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க அறிவுறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்ட எல்லைகளில் அமைந்து உள்ள பர்லியார், குஞ்சப்பனை, கக்கனல்லா, நாடுகாணி, தாளூர், சோளாடி, பாட்டவயல், கெத்தை உள்பட அனைத்து சோதனைச்சாவடிகள் (மாவட்டத்தின் நுழைவுவாயில்) முதல் உதகை வரையிலான நெடுஞ்சாலைகளில் அமைந்து உள்ள அனைத்து கடைகள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், வணிக வளாகங்கள் மற்றும் வனப்பகுதியையொட்டி உள்ள பகுதிகளிலும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், உணவு பொருட்களை பயன்படுத்த வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி சுதந்திர தினம் முதல் தடை விதிக்கப்பட உள்ளது.

நீலகிரி மாவட்டத்தின் நெடுஞ்சாலைகள், சுற்றுலா தலங்கள், பொது இடங்களில் சுத்தமான குடிநீர் பொதுமக்களுக்கு கிடைக்கும் பொருட்டு, சுத்திகரிக்கும் குடிநீர் எந்திரங்களை தற்போது பொருத்தவும், அடுத்த கட்டமாக அனைத்து இடங்களுக்கும் விரிவாக்கம் செய்யவும் முடிவு எடுக்கப்பட்டது.

இது குறித்து அதிகாரிகள் கூறும்போது :- மாவட்ட நிர்வாகம் சார்பில் முதற்கட்டமாக குடிநீர் ஏ.டி.எம். உதகை அரசு தாவரவியல் பூங்கா முன்பகுதியில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நகராட்சி மூலம் ரூ. 1½ லட்சம் செலவில் குடிநீர் ஏ.டி.எம். அமைக்கும் பணி துவங்கியுள்ளது. ஐந்து ரூபாய் நாணயத்தை செலுத்தினால், ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பிடித்துக்கொள்ளும் வகையில், வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதிக்குள் நெடுஞ்சாலைகள் மற்றும் உதகை நகரில் முக்கியமான 20 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம். அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...