கோவையில் டீசல் பேருந்துகளுக்கு பதிலாக விரைவில் வருகிறது பேட்டரி பேருந்துகள்

கோவை : 2020-ம் ஆண்டுக்குள் கோவையில் டீசல் பேருந்துகளுக்கு பதிலாக பேட்டரி பேருந்துகளை இயக்க தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

கோவை : 2020-ம் ஆண்டுக்குள் கோவையில் டீசல் பேருந்துகளுக்கு பதிலாக பேட்டரி பேருந்துகளை இயக்க தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. 

சுற்றுச்சூழல் பாதுகாப்பதில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் டீசல் பேருந்துகளுக்கு பதிலாக பேட்டரியில் இயங்கும் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டது. அந்த வகையில், முதற்கட்டமாக 100 பேட்டரி பேருந்துகளை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில், கோவை மாநகரில் 20 பேருந்துகளை இயக்கி பரிசோதிக்க முடிவு செய்துள்ளதாக மூத்த போக்குவரத்து அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சிம்ப்ளிசிட்டியிடம் அவர் கூறுகையில், "பேட்டரி பேருந்துகள் விமானநிலையங்களில் இயக்கப்படும் பேருந்துகளைப் போன்றே இருக்கும். ஏ.சி. உள்ளிட்ட அதிநவீன வசதிகள் கொண்டிருக்கும். மேலும், டீசல் பேருந்துகளை விட இதில் குறைவான அளவே சீட்டுகள் இருக்கும். அதாவது, 36-40 சீட்டுகளே அமைக்கப்பட்டிருக்கும். இந்தப் பேருந்துகளின் தயாரிப்பு விலை ரூ. 1 கோடியாகும். தமிழ அரசு - ஜெர்மனியைச் சேர்ந்த கே.எஃப்.டபூள்யூ.வுடன் (Kreditanstalt fur Weideraufbau) இணைந்து இந்தப் பேருந்துகளை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. அநேகமாக 2020-ம் ஆண்டுக்குள் இந்தப் பேருந்துகள் டெலிவரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டுப்பாளையம் மற்றும் மற்ற பகுதிகளில் உள்ள சாலைகளின் தன்மை பொருத்து இந்தப் பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. 

இந்தப் பேருந்துகளில் ஏற்படும் தொழில்நுட்ப பிரச்சனைகளை சரி செய்வதற்காக சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருக்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள் பெங்களூரூவிற்கு பயிற்சிக்காக அனுப்பப்பட்டுள்ளனர். மத்திய அரசின் உதவியுடன் வரும் ஆண்டுகளில் 1,300 பேருந்துகளை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பேருந்துகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பெரும் உதவியாக இருக்கும்," என்றார். 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...